என் இதயம்
ஒரு ஒரு முறையும் அன்பு காட்டி ஆனாதையாகி செல்லாதே
காயங்களின் சுவடுகள் ஏராளமாய் இருக்க
நீ வரும் மறுகணமே புத்துயிர் பெற்று..
மீண்டும் மகிழ்ச்சியில் துடிக்க தொடங்கும் என் இதயம்.
பாவம் .... எப்படி அதற்கு புரிய வைப்பேன் மீண்டும் வலியில் துடிக்க போகிறது என்று..
மகிழ்ச்சியின் உச்சத்தை காட்டி மகிழ்வித்ததும் நீதான்
வலியின் உச்சத்தை காட்டி என்னை துடிதுடிக்க விட்டதும் நீதான்.
இரண்டும் பாகுபாடு இன்றி கிடைத்தது.
மனமும் பாகுபாடு இன்றி் வலியில் சிதைந்தது.
சிதைந்த இதயம் சீராக்கும் மருந்து.. நீ தான்..
நீ மட்டும்தான் என்று நீயும் அறிவாய்
பின்பு ஏன் சீராக்கா தயக்கம் கொள்கிறாய்.
தருவது நீயாக இருந்தால் மகிழ்சியானாலும், வருத்தமானாலும் ,
என் இதயம் என்றும் உன்னகாகவே காத்துகிடக்கும்.