ஒப்பனை செய்து

உயிர் இருந்தும் இறந்தவர் ஆனோம் மாநிலத்திரே
உயர்வான தமிழினத்தில் தோன்றியும் தேறவில்லை
சிந்திக்க திறனின்றி தற்குரியாய் அறிவு கொண்டோம்
தெளிவான மா சிந்தனையோர் எழுத்தியலை மறந்து
தெம்மாங்கு கதைகளால் சிதைக்கப்பட்டு நல்லறிவிழந்து
தெரு நாயைப் போல் அலைகின்றோமே மாநிலத்திர்
ஒப்பற்ற ஆளுமைப் பெற்ற தமிழ்ச் சமூகமோ இன்று
ஒப்பனை செய்து நடிப்போரின் பின் அணிவகுத்து
ஓங்கிய நற்கருத்துக்களை ஓதாமல் ஓரறிவு உயிரியாய்
அபத்தமாய் ஆபத்தோடே அரசியல் செய்வது தகுமோ
சீரான செங்கோலால் சிறந்த வரலாறு படைத்த இனம்
சில்லரைத் தனத்தானவரோடு சிலாகிப்பது சிறப்போ
அடர் அறிவை மிளிரச் செய்தால் இஞ்ஞாலம் நமக்கே
அதுவன்றி இருந்தால் அடுத்த தலைமுறை பழிக்கும்.
- - - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (22-Nov-20, 6:59 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : oppanai seithu
பார்வை : 54

மேலே