இறைவனை படைத்த மொழி
நீச மொழி வாழும் தேசத்தில் எங்கும் குடியிருக்காதீர்
தேவ மொழிக்கென்று தேசம் செய்து அங்கு செல்க
வாச மலர்களைக்கூட நீச மொழி நாட்டில் பெறாதீர்
பயணம் செய்யும் போதும் உங்கள் உடலை பொத்துவீரே
நீச மொழி நாட்டிலே பல ஈசர்கள் குடியுள்ளனர்
வாசம் கொழிக்கும் மரங்கள் நீச நாட்டில் நிரம்பியே
சங்கரை தோளில் தூக்குவோர் நீச மொழி பேசுவோரே
சங்கருக்கு கொடுக்கும் அரிசி நீச தேச விளைச்சலே
சங்கர் சிலாகிக்கும் கோயில் நீச தேசத்தன் உழைப்பே
வழிபடும் போது சங்கர் தே(வ)றா மொழியில் ஓதியாம்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மதியாதவன் தமிழ்நாட்டிலோ
தாயை இகழ்ந்தாலும் விடுவோம் தமிழை இகழ்ந்தால்
யாவரையும் உறவாய் பார்க்க கூறியது எம்மொழி எனவே
பிறவியில் குறைவாய் பிறந்தோர் கூறியதை என்றும்
பொறுத்தே வாழ்வில் அமைதி பல வகை காத்தோம்
பொய்யாய் இனியும் கூறின் பொறுமை குறைந்தே போகும்.
------- நன்னாடன்.