விவசாயம்

உண்மை விவசாயி

நேரிசை வெண்பா

கருநிலக் கல்லாங்குத் தையும் நசைந்து
அருகி முயன்றுழுவர் காணும் -- பருகிப்பின்
கூழை குழிசி முகந்துநீர் பாய்ச்சிசெய்
யேழை விவசாயம் காண்

ஏதும் விளையாத கல்லாங் குத்துநிறைந்துள்ள பாறை இடுக்குத் துண்டு துண்டான
நிலத்தையும் ஏதாவது விளையும் என்ற ஆசையால் ஏழை விவசாயக் கூலி குடிசையில்
மிஞ்சி யிருந்த கூழைக் குடித்துவிட்டு. தொலைவிலுள்ள நீர் நிலையில் மண்பானையில்
நீரை முகந்து வந்து அந்த பாறை நிலத்தில் ஊற்றி சேடையாக்கி முயற்சி தளாரா
விவசாயம் செய்தானாம்.உண்மை விவசாயி
......


.....

எழுதியவர் : பழனிராஜன் (26-Nov-20, 7:10 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : vivasaayam
பார்வை : 2710

மேலே