காதல்

கண்டேன் பூவுக்குள் உனது முகம்
கொண்டேன் மனதிற்குள் புதிய சுகம்
பூச்செண்டில் நின்றாடும் வண்டாக
நாவுக்குள் ராகங்கள் படிக்கின்றேன்

மேகத்தை ஒத்த கருங் கூந்தல்
மின்மினியின் ஒளியென கண்ணழகு
சத்தமின்றி பேசுகின்ற பாஷைகள்
செந் சந்தனமாகவே எனை மயக்கும்

தூரத்தை அளந்தால் பல மைலாகும்
மனதளவில் அளந்தால் என்னருகே அவள்
அழகோவியம் ஒன்று உயிர் கொண்டு
அதுவாகவே வந்து என்னருகே நின்று

கொள்ளையடித்து செல்லும் அழகே அழகு
எந்தப் பூவும் இல்லை அவளது அழகு
மவுனமாகவே அவள் பாடுகின்ற ராகங்கள்
மனசுக்குள் இதமான வீணையை மீட்டும்

இருவரின் விழிகளும் கலந்ததால்
இதயத்தில் உறவு திரண்டதால்
கடலிலும் மேலான காதல் மனது
கணப்பொழுதில் காணாவிடினும் வாடுவதேன்

மாமரச் சோலைக்குள் என் காதலி வருவாள்
மனதிற்குள் அன்பை சேர்த்து தருவாள்
மருதாணி பூ போல் அவள் சிரிப்பில்
சருகாகிப் போகிறேன் பூரிப்பில்

மல்லிகை வாசனை என்னை மயக்கும்
புன்னகைப் பூக்களையே விதைக்கும்
கருத்தொருமித்த காதலால் என்றும்
வனப்புற்று வாழ்ந்திருப்பேன்

எழுதியவர் : Ranjeni .k (29-Nov-20, 3:05 pm)
சேர்த்தது : Ranjeni K
Tanglish : kaadhal
பார்வை : 255

மேலே