என்னிதயம் துடிக்கவில்லை
ஏகாந்தமதே இனிமையென்று
இதுவரை நினைத்திருந்தேன்
இதுவல்ல நிஜம் இதற்கும் மேலும்
உண்டென்று உரிமையுடன்
ஒரு குரல் ஒலித்தது
துள்ளல் நடையுடன் கூடவே
இரு பின்னல் ஜடையும் நடனமிட
மெல்லிய கொலுசொலி என்
இதயத்தை உடைத்து விட
இள மல்லிகை நடந்து வந்தாள்
பொன்னை குழைத்து பூசிய நிறம்
புன்னகைக்கும் குறைவு ஏனோ
அவள் வைக்கவில்லை பேச்சு
மட்டும் அவள் அளந்து பேசும்
விந்தை தான் என்னவோ
இரு கண்களால் பேசுகின்றாள்
காவிய வார்த்தைகளை இளம்
காற்றாகவே பறக்கிறது என் மனது
நாணல் கீற்றாக அவள் நினைவை
என் மனதோடு மோதவிட்டு
தென்றல் என மறைந்த தேவதை
திசை பார்த்து தேடுகின்றேன்
தினமும் நான் திரும்பவும் வருவாளா
என்னிதயத்தை திருப்பித்தர
என்னிதயம் துடிக்கவில்லை தவிக்கிறது.