மருத்துவ வெண்பா – மல்லிகைப்பூ - பாடல் 75
நேரிசை வெண்பா
போகமிக வுண்டாகும் பொங்குகபங் கட்பிரமை
யாகவனற் சூனியமும் அண்டுமோ – பாகனையாய்
மன்னு திருவசியம் வாய்க்குஞ்சூ டென்றெவரும்
பன்னுமல்லி கைப்பூவாற் பார்!
- மருத்துவ குண விளக்கம்
குணம்:
மல்லிகை கொடி மல்லிகை, ஊசி மல்லிகை, குட மல்லிகை, சாதி மல்லிகை எனப் பலவகை உண்டு.
புணர்ச்சியில் அதிவிருப்பம் உண்டாக்குகின்ற மல்லிகைப்பூவால் கோழை, கண் மயக்கம், தேக உஷ்ணம், சூனியம் ஆகிய இவை நீங்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். இதனை உஷ்ணம் என்பர்.
உபயோகிக்கும் முறை:
நல்லெண்ணெயில் இப்புட்பங்களைப் போட்டு வெயிலில் வைத்துப் புட்பங்கள் வாடி வதங்கிக் கருத்தபின் வடிகட்டிச் சீசாவில் வைத்து தினம் கூந்தலுக்குத் தடவி வரச் சுகந்த வாசனையையும், உற்சாகத்தையும் உண்டாக்கும். இந்தப் புட்பத்தை பெண்கள் மார்பில் 3 நாட்கள் வைத்துக் கட்டப் பால் சுரப்பை அடக்கிவிடும்.