அயல்நாட்டு காதலும் நம்நாட்டு காதலும்

கண்கள் பேசிடக் காதல் வளர்த்தான் !
நீ இல்லையேல் .. உயிர்நீப்பேன் என்றான் !
வாழ்நாள் முழுக்க வேண்டும் என்றான் !
காதல் வளர்ந்திடக் கரங்களைப் பிடித்தான்!
ஒருவருடத்தில் மோகம் தீர்ந்திட ..
பிரிந்து சென்றனர் அவளும் அவனும் !
மீண்டும் உண்மையாய் காதலித்தனர் வேறு ஒருவரை !
இதையே வெளிநாட்டில் காதல் என்றார் ..!

இங்கோ பார்த்துப் பழகியது இல்லை !
பார்க் பீச் என்று சுற்றித்திரியவில்லை !
இரவும் பகலும் கைபேசியில் ..
முத்தம் பரிமாறவில்லை !
தாய் தந்தையின் ஆசைக்காக ..
ஒன்றுசேர்ந்தோம்!
கடைசிவரை கைப்பிடித்தான் ..
கண்கலங்கிட ..அவனே கலங்கினான் !
திருமணத்திற்கு முன்வருவது தான் ..
காதல் என்று நினைத்தேன் !
திருமணத்திற்குப் பிறகும் காதல்
வரும் என்று நிரூபித்தான்!
இங்கோ மதம் சாதி என்று
வேறுபாடு உண்டு என்பர் ..

எங்கு இல்லை வேறுபாடு !
உலகைக் கண்டேன்
நிறத்தில் வேறுபாடு !
மதத்தில் வேறுபாடு !
கண்டத்தில் வேறுபாடு !
கண்டத்தைக் கண்டேன்..
மதத்தில் வேறுபாடு!
நாட்டில் கண்டேன்..
மொழியில் வேறுபாடு !
எதில் இல்லை வேறுபாடு !
இத்தனை வேறுபாடு கண்டினும் ..
கட்டிய கணவனுக்காக..
மதுரையை எரித்தாள் கண்ணகி !
கட்டிய கணவனுக்காக ..
ஆதவனுக்கே ஆணை இட்டாள் நளாயினி !
வேறுபாடுகள் இல்லாத காதல் ..
எங்கே உண்டு !!
அயல்நாட்டைக் காட்டிலும் என்னாட்டிலே ..
காதலும் மனமும் உயர்ந்தது !!!

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:21 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
பார்வை : 78

மேலே