பண்ணைப்புர இளவரசனுக்கு பிறந்த நாள்
![](https://eluthu.com/images/loading.gif)
செந்தூரப் பூவை சில்லென்று எடுத்து வந்தாய்
பூவரசம் பூவால் பெண்ணுக்கு சேதி சொன்னாய்
காதல் வைபோகமே என்று குதுகலித்தாய்
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே என்றழைத்து
சிறு பொன்மணி அசையும் என்று சிலாகித்தே
சிந்திய வெண்மணியை சிப்பியில் முத்தாக்கினாய்
பூத்துப்பூத்து குலுங்குதடி பூவு என்று மகிழ்ந்தாய்
என் இனிய பொன் நிலாவே என்று பரவசமானாய்
அரைச்ச சந்தனத்தை குங்குமத்தோடு இணைத்தாய்
ஊறுவிட்டு ஊறு வந்தவர்களுக்கு காதல் கற்பித்தாய்
பாட்டு உன்ன இழுக்குதா... என கேட்டு மகிழ்வித்தாய்
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என்றே
அகில தமிழர்களையும் பாட்டெழுதி பரவசம் படுத்திய
பண்ணைப்புரத்தின் இளவரசனே நெடுநாள் வாழ
உன் பிறந்த நாளான 08.12.2020 ல் வாழ்த்துகிறோம்
வளங்களின் பலத்தோடு வாழ்க நீ கங்கை அமரனே.
----- நன்னாடன்.