இராணுவ வீரன் அவன்
இராணுவ வீரன் அவன்
எங்கும் கரும் இருள்
அதை விட கடும் பனி
கல்லாய் நின்று
காவல் காத்து கொண்டிருந்தான்
பொழுதை அப்பொழுதும்
இன்பமாய் கழிக்க
நினைத்தவன்
கடும் பனிக்குள்
வெளிச்சமிட்ட நிலவொளியில்
கண் சிமிட்டும் விண்மீகள்
பார்வையாளராய் இருக்க
கவிதை பாட வேண்டுமென்று
தோளில் தொங்கிய
தோட்டா உமிழும்
துப்பாக்கி
இசையை மீட்டும்
கிடாராக மாற
உடன் நாட்டியமும்
ஆட வேண்டுமென்று
நடந்ததென்னவோ
எதிர் எல்லையில்
இருந்து பறந்து வந்த
தோட்டா ஒன்று அவன்
தோளை உரசி
குருதியை ருசித்து
விட்டு சென்றது