குத்தியும் இரத்தம் வருவதில்லை

குத்தியும் இரத்தம் வருவதில்லை

இரத்தம் வருவதில்லை
என்பதால் ஈட்டி கொண்டு
இன்னும் இன்னும்
ஆழமாய் குத்தி கிழித்து
கொண்டிருக்கிறான்
நிலத்தை

அத்தனை குத்துக்கள்
ஈட்டியால் வாங்கியும்
சப்தமிடாமல் இறுதியில்
அழத்தான் செய்கிறது

அப்பொழுதும் மனிதன்
இன்னும் கொஞ்சம்
ஆழமாய் நெஞ்சில்
குத்திவிட்டுத்தான்
ஓய்கிறான்

காரணம் கேட்டால்
உன் அழுகைதான்
எனக்கு ஆனந்தமே
என்கிறான்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Dec-20, 6:24 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 156

மேலே