காதல் கலக்கிறாய்

முகம் மூடியே
இதயம் திறக்கிறாய்
உயிர் நாடியில்
காதல் கலக்கிறாய்
நிற்காமல் போகாதே
நிற்கிறேன் உனக்காக
சாலைகள் தூரம் போகும்
காதல்கள் போகாது

கல்லூரி புத்தகம்
சுமப்பவளே
காதல் புத்தகம்
சுமப்பாயோ
இதயத்தால் எழுதி
யிருக்கிறேன்
காதல் நூலகங்களில்
படிப்பாயோ

விழிகளில் பசிக்குது
உன்னால்
வழிகளில் உரசுது
பெண்ணால்
விரும்பிய இதயத்தை
திரும்பாத நீ
நீதிரும்பிய இடங்களெல்லாம்
நான் விரும்புகிறேன்

அரியரை போலவே
என் காதலும்
திருத்த திருத்த
மதிப்பெண் இழக்குது
கல்லூரிக்கு விடுமுறை
யிட்டார்கள்
காதலுக்கு விடுமுறை
யார் விடுவது...

இளம் கவியரசு : அப்துல் பாக்கி

எழுதியவர் : (15-Dec-20, 6:51 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : kaadhal kalakkiraai
பார்வை : 149

மேலே