கதிரருவா தீர்ப்பை கிழிக்கட்டும்
அறுவடைக்காக நீண்டகைகள்
அனுமதிகேட்டு நீளுது
தலைநகர் டெல்லியை விவசாய
தலைகள் சூழுது
கதிரருவா தீர்ப்பை கிழிக்கட்டும்
விவசாயி இரத்தம் பாராளுமன்றத்தை
நனைக்கட்டும்
கலப்பைகள் தலைநகரை
உழுவட்டும்
மெதுவாய் அங்கே பசுமைகள்
முளைக்கட்டும்
விதைத்தவனை புதைக்காதீர்
அரிசி தந்தவனுக்கு
வாய்கரிசியை தூவாதீர்
வேளாண்மையை வேலால்
குத்தாதீர்
வேர் இல்லையெனில்
பசுமைகள் இல்லை...
இளம் கவியரசு : அப்துல் பாக்கி