சேலம் நடராஜன்

துள்ளி குதிச்சு
வானம் தொடு
மெல்ல இழுத்து
பூமியில் நடு
கைகள் பதித்து
நீலம் எடு
கால்கள் பதித்து
சுவடுகள் இடு

பந்து வீசி
நிலவை பிடி
வந்து பேசும்
மீடியா வெடி

மலையின் மீது
மழை சாரலாய் வா
அலையின் மீது
நுரை தூறலாய் வா

பாதம் பூட்டாதே
பாதை திறந்து வா
வேர்போல் உறுதி
கொள்
ஏறுபோல் உழுது
வா

விரல்களால் தீ
மூட்டு
விழிகளால் ஒளி
கூட்டு
சூரியனை இமையில்
அணை
வியர்வையால்
தோல்வியை நனை

பொங்கி எழு
தேங்காதே
முங்கி விழு
தூங்காதே
விழுந்த கண்ணீர்
விதையாய் போனது
வடிந்த காயங்கள்
விருதாய் மாறுது
தெளிந்த தண்ணீர்
தீர்த்தம் ஆனது
நிமிர்ந்த தூண்தான்
கோபுரம் தாங்குது

நீ எல்லாம்
தாங்கினாய்
வெற்றிகளெல்லாம் இனி
உன்னை தாங்கும்...

இளம் கவியரசு : அப்துல் பாக்கி

எழுதியவர் : (15-Dec-20, 6:49 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 124

மேலே