காதல் மொழி
காதலுக்கு மொழியுண்டு...
வார்த்தைகள்தான் இல்லை...!
காதல் என்று வந்துவிட்டால்
கண்கள் பேசும் பாசைகள் ஆயிரம்..
வார்த்தைகளின்றி வசந்தம் தரும்
வாசமுள்ள மலர் அது...
கால்களின் கணு விரலும்
கவிதைபாடும் வசந்தமாய்...
கண்களால் சந்தித்து..
காதலால் இடம்மாறி..
இடம் மாறிய இதயத்திற்காக
இதயம் அனுப்பும் இன்ப மடல்...
காதலித்துப்பார்...
காதல் மொழி புரியும்....!