உடலும் ஆன்மாவும்
விம்மிப்புடைத்த மார்பு குன்றாய்த் தோள்கள்
வம்பிற்கு இழுக்கும் கூறிய விழிகள்
நீண்ட அடர்ந்த கரும் குழல் ,,,,, என்ற
இவை அத்தனையும் 'ஆணழகன்; இவன்
என்று உலகம் போற்றிய எந்தன்
நேற்றைய தோற்றம்.... ஐயகோ என்சொல்வேன்
இன்று என்னையே நிலைக்கண்ணாடி முன்
பார்த்து நொந்துபோனேன் ..... எங்கே போனது
என் இளமைத் தோற்றம்.......
விம்மிப்புடைத்த மார்பு குறுகி உள்ளடங்கிப்போக
தொய்ந்துபோயின திண் தோள்களுமே கருங்குழல்
போய் நரை குழலானதே ..... இளமையே
இல்லாமல் போக.... ஓரிரு வினாடிகள்
எண்ணுருவம் காணாமல் போக அங்கு
நிலைக்கண்ணாடியில் ஒரு புள்ளி புலப்பட்டது
'நான்தான் ...... உந்தன் நிஜம் நீ' என்றது
'நான்தான் உந்தன் ஆத்மா' என்றது ...
'அப்போது என் உடம்பு...? அது அழியும்
போர்வை 'உனக்கு'..... 'உனான்மாவிற்கு' என்றது
மீண்டும் பார்க்க ..... புள்ளி காணவில்லை
என் வயோதிக தோற்றமே தெரிந்தது
இப்போது 'என்னை யார் என்று' புரிந்துகொண்டேன்
நான் ' என் உடல் இல்லை',,,,,, நான்' என் ஆன்மா'