தென்றலும் புயலும்
நம் வாழ்க்கையில்
சில மனிதர்கள்
தென்றலாக வந்து
மன அமைதியை
தந்து செல்வார்கள்....!!
சில மனிதர்கள்
புயல் சின்னமாக
நம்மை நெருங்கி வந்து
நம்மை விட்டு
கடந்து செல்லாமல்
மையம் கொண்டு
நம் அமைதியை
அழித்து விட்டுதான்
செல்வார்கள்....!!
--கோவை சுபா