பிளாக் டெத்
![](https://eluthu.com/images/loading.gif)
போப் கிரிகோரி IX இங்கிலாந்து நாட்டின்
14ம் நூற்றாண்டிற்கான கிருஸ்துமத போப்
அரசனைவிட அதிகாரத்தில் மிக உயர்ந்தவர்
பூனைகளை சாத்தானின் உருவமென்றார்
காணும் போதே அவைகளை கொல்லச் சொன்னார்
மக்களும் மறுப்பின்றி யாவற்றையும் கொல்ல
எலிகள் எங்கும் பெருகி எக்காளமிட
எலியினத்தில் கருப்பு வகை எங்கும் விரைவி பெருக
பிளேக் தொற்று இங்கிலாந்தில் களேபரம் செய்தது
இருபது இலட்சம் பேர் நோயால் மாண்டனரே
வரலாற்றிலே இதற்கு பிளாக் டெத் என்று பதிவுற
இறந்தவர்களோ லண்டனின் பாதி மக்கள் தொகை
மதத்தின் பெயரால் மடிந்தது மானிட இனம்
பதவியின் மதத்தால் இருந்தவர் பாவம் செய்ததால்
பகுத்தறிவு அங்கு பட்டுப்போனது மனிதம் கேடானது
பரம்பொருள் பார்ப்பதில்லை உயிர் கொலைகளை.
----- நன்னாடன்.