தமிழர் கொள்கை

தமிழர் கொள்கை

கும்பிநிரப்பத் தேடாதே உதவி

கலித்துறை
நேரிசை வெண்பாக்கள்

பிச்சை தாரா ரெம்நாட் டில்கா ணென்றனரே
பொச்சாந் தும்கேட் கார்பிச் சைமா னம்பெரிதாம்
இச்சை கொண்டு தந்தா லையம் கொள்வரிலை
மிச்சில் மீதி வாங்கிக் கொள்வா ரில்லையாமே
(பழனிராஜன்)


வள்ளலிங்கு யாரடா தள்ளிநின்று காட்டடா
அள்ளிக் கொடுத்தவன் யாரடா -- நள்ளிபாரி
யில்லையடா தொல்லைதந்து பின்னேக் கேட்டிடுவன்
நல்லத்தன் மானத்தை யே

குறட்பாக்கள்


பிறர்த்தானம் எத்தனைவே ளைத்தள்ளும் நாளும்
எடுப்ப்பனையோ பிச்சை கெடும்

தந்து பிடிப்பனாண் பெண்ணை பிடித்தபின்
தந்திடுமா னத்தையென் பான்


நலிந்தாலும் மானத்தை காற்தயைத்தே டாதே
கலியில் உதவலும் பொய்



தமிழர் கொள்கை
___________________

தனக்கு வேண்டியவற்றை தானேத்தேடி வாழதல் வேண்டும்

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதநெரிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்ததன்று
கொள்ளேனக் கொடுத்தல் உயர்ந்தன்ற ததனெதிர்
கொள்ளே னென்றல் அதனினும் உயர்ந்தன்று (புற நானூறு 204)

நேரிசை வெண்பா என்று தவறுதலாக குறிக்கப் அட்டுள்ளது மன்னிக்கவும்

எழுதியவர் : பழனிராஜன் (6-Jan-21, 4:33 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே