வெந்த விதை
🥜🥜வெந்த விதை🥜🥜🥜
jQuery17107174335702631627_1609933409234??????????????????????????
வெள்ளைதுணியில் கறை பட்டால் வெளுத்து கட்டியகாலம்போய்
குப்பைமேட்டில் குந்திக்கொண்டு
சுத்தப் புகைப்படம் எடுக்கப்படுது
லஞ்சம் வாங்குவது குற்றம் என்று எழுதிய பலகை தவறுனர்ந்து
இதுவரைஅதுமட்டும் வாங்காமல்
எடுப்பாய் தொங்குது முன்சுவரில்
சனியன்கள் வாங்கும் அரசுப்பணி
சம்பளம் என்பதோ மிகச்சிறுதுளி
சனிப்பெயர்ச்சிகூட நடந்திடுது--இந்த
சனியன்களைப் பெயர்க்க வழியில்லையா ?
கடைக்கோடி மனிதனும் அறிந்திருந்தும்
களைந்துட யார்க்கும் துணிவில்லையே
களிசடைகளோடு வாழ்வது பார்
கட்டிக்க துணியின்றி இருப்பதுபோல்
வெந்த விதைகளை நீக்கி விட்டு
வீரிய விதைகளை இனிவிதைப்போம்
😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤