நாயொத்த புத்தியில்

இன்னிசை வெண்பா, ஆசிரியப்பா கவிதை

பேயொத்த சிந்தையில் ஆள்வோரும் ஒத்திருக்க
நாயொத்த புத்தியில் வாக்கிடுவோர் நோக்க
நரியொத்த தந்திரத்தில் வாக்குறுதிச் சொல்ல
நலமில்லா வண்ணம் உலகு.

அள்ளித் தூவி எங்குமே விதைக்கிணும்
அல்லிக் கொடி நிலத்திலே முளைக்குமோ
கொள்ளிக் கொண்டு கள்ளியை எரிக்கிணும்
மலருக்கு வந்திடுமோ மனமேற்கும் வாசமே

எள்ளியே நிலவையாரும் பழித்த போதிலும்
வெள்ளியோ வடக்கினில் முளைத்துத் தெரியுமோ
உலகினிர் கண்ணில் படுகின்ற எவற்றையும்
கன்னக்கோல் வைத்தே காக்கவே முடியுமோ

மின்னும் மின்னல் அடர் ஒளியினால்
வானவில் வண்ணம் பல்நிறந் தெரியுமோ
திண்ண எண்ணம் மனதில் மிகுதியுற்றால்
தீமைகள் அஞ்சியே விலகி ஓடுமே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (6-Jan-21, 6:44 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 59

மேலே