சூரியனுக்கு பொங்கல் வைப்போம்

நேரிசை வெண்பா
இரவில் வினைக்காத லெங்கும் புரிய
நிரம்பியப் சந்திரனைத் தேடும் ---. நரன்மா
திறத்தொழில் செய்யக் கதிரொளித தேவை
சிறப்பாஞ்செஞ் சூரியனே பார
வெய்யோன் வடதென் கலைமாறல் இன்றென
வெய்யொன் தொழுவர் உழவரும் --. பொய்யில்லை
யாரும் உழவுசெய்தார் தாரணியில் ஆதலின்
பாரும் தொழுதசூரி யன் ,(பாரும் = உலகே)
குறள் வெண்பா
இந்நன்நா ளில்பரி மாறியே வாழ்த்துவோம்
செந்தமி ழர்நாமென் றும்