பொங்கல் வாழ்த்து

அ*கல் விளக்கேற்ற
ஆ*தவன் உதிக்க
இ*யற்கை வாழ்த்த
ஈ*கை வளர
உ*ழவன் மகிழ
ஊ*ர்மக்கள் இணைய
எ*ண்ணத்தில் பாட்டிசைத்து
ஏ*ர்கலப்பை ஏய்தி
ஐ*வகை நிலங்கள் செழிக்க
ஒ*ற்றுமையாக கைகோர்த்து
ஓ*ர் குரலிட்டு பறை சாற்றுவோம்
"நம் வீரத் தமிழரின் பண்பாட்டை"
ஔ*வியம் பேசாத் தமிழே ;
மனித நெஞ்சுக்குள் தெய்வங்கள் குடியேற ;
மங்கள வாத்தியங்கள் நாடெல்லாம் ஒலிக்க ;
கன்னியரின் கடைக்கண்
பார்வை பட்டு ;
கள்ளமில்லா காளைகளும் துள்ளுதடி மஞ்சுவிரட்டில் ;
கட்டிக் கரும்புடனும் ;
கொத்து மஞ்சளுடனும் ;
பூக்களை தோரணங்களாக்கி ;
கொட்டடித்து ;
குலவை போட்டு ;
கை வளையல்கள் குலுங்க கும்மியடித்து ;
ஆரவாரம் செய்வோம்
இந்த தைத் திருநாளன்று ;
நாற்று நட்டு ;
பயிர் வளர்த்து ;
அறுவடை செய்த
நெல் முத்துக்களைக் கொண்டு அரிசியாக்கி ;
அச்சு வெல்லத்தோடு
பாலும் சேர்க்க;
அனைவரும் ஒன்றாய் கூறுவோம்
நம் அழகான பைந்தமிழிலே
🌻பொங்கலோ பொங்கல் 🌻

எழுதியவர் : 🌻சிம்மயாழினி🌻 (14-Jan-21, 8:03 pm)
சேர்த்தது : சிம்மயாழினி
பார்வை : 88

மேலே