யுவன் யுவதி என்ற

யாவரும் கேளுங்கள் யாவற்றையும் கேளுங்கள்
யமன் பயம் நீங்கிடவே யவற்றைச் செய்தல் நலம்
யாக்கை காப்போரும் யாதையும் புசிப்போரும்
யாழிசை இசைப்போரும் அதனில் மூழ்குவோரும்
யாவற்றையும் காப்போரும் யாருக்கும் உதவுவோரும்
யானைப் பலங்கொண்டோரும் யாப்பெழுதுவோரும்
யாராக இருப்பினும் யமப்பிடிப்பு விடுபடுமோ
யக்கியம் மூட்டி நெருப்பிடம் பேசி ஏய்ப்போரும்
யவன நாட்டு யாத்திரிகர் என்றே சொன்னாலும்
யாளியாய் வாயில் நெருப்பை பலவாறு இறைப்பிணும்
யதேச்சகாரனாய் யாவரையும் மிரட்டினாலும்
யோகக்காரன் என்று ஊரே போற்றினாலும்
யுவன் யுவதி என்ற எந்திலையில் வாழ்ந்தாலும்
யாராக இருப்பினும் யமப்பிடிப்பு விடுபடுமோ
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Jan-21, 10:55 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 87

மேலே