சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் இருக்கும்வரை
முத்துக்கு நல் மதிப்பு...

சிப்பியை விட்டு முத்து
வெளியே வரும் போதுதான்...

அந்த முத்து
"நல் வகை" முத்தா
இல்லையா என்பது
வெளி உலகுக்கு தெரிந்து
நல் வகை முத்து என்றல்
மதிப்பு மேலும் கூடிவிடும்...!!

அதுபோல் தான் ...
ஆட்சி செய்யும் அதிகாரம்
கிடைக்காதவரை ...
எல்லோரும் நல்லவரே,,,!!

ஒரு மனிதனின் கையில்
ஆட்சி அதிகாரத்தை
கொடுத்த பிறகுதான்
நம் எல்லோருக்கும் புரிகிறது

அந்த மனிதன் நல்லவனா ...
கெட்டவனா ...என்று
சிப்பிக்குள் இருந்து
வெளி வந்த முத்தினை போல..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Jan-21, 5:44 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sippikul muththu
பார்வை : 149

மேலே