தரவு கொச்சகக் கலிப்பா

====================
கோடரிகள் தனையேந்திக் குளிர்வனத்து மரம்வெட்டி
வீடமைத்துக் குடியிருக்கும் விபரீத நிகழ்வாலே
காடழிந்து வருவதிங்கே கவலைதரும் செயலாகும்
நாடழித்து விடுவதற்காய் நடத்துகின்ற சமராகும்
ஆதலினால்
நீரிலா நிலைதனை நிலமும் காணா
பாரிதே என்றிடும் படிக்கு
வேரிட மரங்களை விரைந்தினி நடுவமே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Jan-21, 1:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 49

மேலே