சாளரத்தில் ஒரு வண்ணக்கொடி

குடியரசு தினமடா கொடிவணக்கம் செய்தாயடா
பேரப்புள்ள என்று கேட்டாள் பாட்டி
கொடி கொட்டாவி விட்டு துயில் கலைந்து
இப்பொழுதுதான் வந்து கொண்டிருக்கிறது
பல் துலக்கி நறுமணப் புன்னகையுடன் வரட்டும்
தரித்து சல்யூட் அடித்து வருகிறேன் என்றான்
சாளரத்தில் வண்ணக்கொடி தரிசனத்திற்கு
காத்திருந்த பேரப்புள்ள

பால் பொங்கி வழிந்து கொண்டிருக்க
பழைய நினைப்பில் பின்னோக்கிச்
சென்று கொண்டிருந்தாள் பாட்டி......

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jan-21, 9:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே