செம்மொழியே செம்மொழியே 555

***செம்மொழியே செம்மொழியே 555 ***


மிழ்பனை...

கொல்லைப்புறத்தில்
பனையோலை சலசலக்க...

இரவினில்
நடுங்கி போனேன் பயத்தில்...


நம் முன்னோர்கள்
பயமற்றவர்கள்...

சலசலத்த பனைஓலையை
ஒரு கையால் வெட்டி எடுக்க...

மறுகையில்
எழுத்தாணிகொண்டு...

படைத்
காவியங்கள்தான் எத்தனை...

இன்று வள்ளுவனின் எழுத்துக்கள்
உலகின் பொதுமறையாம்...


உள்ளத்தில் நானூறு
வெளியில் நானூறு...

பெருங்காவியங்கள் ஐந்தாம்...

தொகைகள் எட்டாம்
பாட்டுக்கள் பத்தாம்...

நான்கடி சீராம்
கலிங்கத்துப்பரணியாம்...

தாய்மொழிக்கும் முழு இலக்கணம்
படைத்தான் பனைஓலையில்...

இன்று இலக்கணமும்
தெரியவில்லை...

தாய்மொழியின் அருமையும்
புரியவில்லை நம்மில் பலருக்கு...

கைகளில் கிடைத்த
காவியங்கள் பல...


இன்னும் தூசு
தட்டப்படவில்லை...


மண்ணில் புதைந்த
காவியங்கள்தான் எத்தனையோ...


எனக்கு தடுமாற்றம்
தாய்மொழி இலக்கணத்தில்...

இனி வரும் சந்ததிகள்
எப்படி உணர்வார்களா...

என் தாய்மொழியின்
செம்மொழி அருமையை.....





***முதல்பூ பெ .மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (28-Jan-21, 5:21 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 351

மேலே