தூவானம் விடவில்லை
ஆசையே துன்பத்திற்கு
காரணம் என்ற
போதனையை
என் சிந்தனையில்
நிறுத்திக் கொண்டபோதும் ...!!
என் எண்ணத்தில் உதித்த
ஆசைகளை மறக்க
நான் பல முயற்சிகள்
செய்தபோதும் ...!!
என் உள்ளத்தில்
ஆசை அலைகள்
வந்து வந்து
மோதுகின்றன..!!
மழை விட்டும்
தூவானம்
விடவில்லை
என்பதை போல..!!
--கோவை சுபா