சுயநலவாதிகள்

தன் நலம் பாராமல் பிறர்க்கு
உதவி செய்வது என்பது
எல்லோராலும் செய்ய
முடியாது ...!!


ஆனால்...
சிறிது காலம் கடந்த பின்பு
உதவி பெற்றவன்
உதவி செய்தவனை
பார்த்து ...!!

நீ எனக்கு என்ன செய்து
கிழித்து விட்டாய்
என்ற கேள்வியால்
அந்த நல்ல மனதை

வேல் கொண்டு
தாக்கியது போல்
குத்தி காயப்படுத்தி
விடுவார்கள்
சுயநலவாதிகள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (31-Jan-21, 10:36 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 2005

மேலே