காற்று ஒரு ஜன்னல் பார்வையில்
பேரமைதி திகைக்க
மரத்தில் அமர்ந்தது
புயல்காற்று.
வண்ணம் சிலிர்க்க
சிரிக்கும் காற்றுக்குள்
உடையும் பலூன்களின்
மூச்சுக்காற்று.
தவிக்கும் பட்டங்களை
தாவித்தாவி உண்ணும்
பசி தீராத காற்று.
நெளியும் நீள் கடலில்
அலைகள் மேய்க்கும் காற்று.
ஒலியில் மூச்சென்று
இசை நிரப்பி விம்மி
நகர்ந்தோடும் காற்று.