மானமிகு அரசியலரான மானிடர்

கலித்தாழிசை பா கவிதை

உயிர்களில் சிறந்தவர் மானிடர்
உயர்நிலை அடைந்தவர் அரசியலர்
உயர்ந்தவர் என்றுக் கூறியே
உலகின் எதனையும் அழிப்பரே
உயர்நிலை அரசியலர் யாவரும்
உயிர்ரிறக்கம் இன்றியே ஆள்பவர்
உண்கின்ற உணவினை பதுப்பவர்
உண்மையை காசினால் மறைப்பவர்
உன்னத திரவிங்களை சிதைப்பவர்
உத்தமன் போல்தம்மை காட்டுவார்
உயிர்கொல்லும் நஞ்சினை கொண்டவர்
உபத்திரம் பன்மடங்கு கொடுத்திடுவர்
உதிரத்தை தண்ணீராய் குடிப்பரே
உள்ளதொன்று புறங்களே பேசுவார்
உலகில் இவர்களோடு வாழ்வெதென்பது
உளிக்கொண்டு நீரில் சிற்பம் செய்வதாமே.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Feb-21, 1:23 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 64

மேலே