முகநூல் பதிவு 284
27.1.2020
🔴 எச்சரிக்கை☝️🔔
கொரொனா வைரஸின் கோரப்பிடியில் சீனா.....
2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்....
இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை....
இலேசான இருமல் சளிதான் இதன் அறிகுறிகள்.....
இந்த வைரஸ் மனிதனின் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது.... சுவாச மண்டலத்தில் உள்ள செல்கள் வீக்கம் அடைகிறது.... முதலில் நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும்.... நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை பெரியதாய் இது பாதிப்பதில்லை.... எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையும், ஏற்கெனவே சுவாச மண்டலம் பாதிக்கப் பட்டவர்களையும் எளிதில் தாக்கும்....
இன்று மாலை வரை இந்தியாவில் 11 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்....
ஏற்கெனவே இது குளிர்காலம் போல் இருப்பதால் .... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய்.... தயவு செய்து குளிர் பானங்கள் மற்றும் ஐஸ் க்ரீம்களை கட்டாயம் தவிர்க்கவும் .... கூடுமானவரை சூடான உணவை உட்கொள்ளவும்....வெண்ணீரை அருந்தவும்.....
இது காற்றின் மூலம் பரவுவதால் அருகில் உள்ளவர்களுக்கு இருமலோ தும்மலோ இருந்தால் சற்று பாதுகாப்பான சூழலை உங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டு அவர்களையும் உடனடியாக மருத்துவ ஆலோசனக்குச் செல்ல அறிவுறுத்தவும்..... பொது இடங்களுக்குச் செல்வோர் மாஸ்க் அணியவும்....
வரும் முன் காப்பதே நலம்!

