கவிஞர்களுக்கு

கவிஞரே (புது) கவனியும்


நேரிசை வெண்பா

நேர்க்காயு டன்சேர்க்க இன்னுமே பூவாகும்
நேர்கனியு டன்தண் நறும்பூவாம் -- பார்நீ
நிரையுமே காயுடன்சே ரத்தண் நிழலாம்
நிரைக னிநறு நிழல்


தேமாங்காயுடன் இன்னும் நேரசை சேர்க்க தேமாந்தண் பூ யென்பர்(இதேபோல்தான்
புளிமாந்தண்பூ , கூவிளந்தண்பூ கருவிளந்தண் பூ வும் அமையும்)
தேமாங்காயுடன் நிரையசை சேர்க்க தண் நிழல் என்பர்

காயில் நேரசை சேர்ந்தால்

இங்கேயே தான் = தேமாந்தண்பூ வாகும்
பழிவந்தா லும் =. புளிமாந்தண் பூ
இங்குமேதான் நான் = கூவிளந்தண் பூ
எனதுவரை கும். =. கருவிளந்தண் பூ

கனியில் நேரசை சேர்ந்தால்

கண்ணேயுனக் கே =தேமாந்தண் நறும்பூ வாகும்
கணக்குக்குமே நான் = புளிமாந்தண் நறும்பூ
கண்ணனுக்கெனின் நான் =புளிமாந்தண் நறும்பூ
சபையுடையக் கால். = கருவிளந்தண் நறும்பூ


காயில் நிரை சேர தேமாந்தண் நிழல் புளிமாந்தண் நிழல் கூவிளந்தண் நிழல்
கருவிள ந்தண் நிழலாம்

கனியில் நிரை சேர தேமாந்தண் நறுநிழல் புளிமாந்தண் நறுநிழல் கூவிளந்தண்
நறு நிழல் கருவிள ந்தண் நறு நிழல் என்றழைப்பர்

கவிஞர்களே பாட்டெழுத மாச்சீர் விளச்சீர் காய்ச்சீர் கனிச்சீரை பயன்படுத்துங்கள்
பூச்சீர் நறும்பூச்சீர் தண்நிழல் நறுநிழலைப் பயன்படுத்த ஆகாதப்பா ஆசிரியப்பா
வெண்பா விருத்தங்களும்
இனியாவது இதைக் கடைபிடியுங்கள் புதுக் கவிஞர்களே



.......

எழுதியவர் : பழனிராஜன் (5-Feb-21, 8:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 47

மேலே