கல்லறை இல்லை
கல்லறை இந்தியாவில் இல்லை
நேரிசை வெண்பாக்கள்
இந்திய மக்கள் இறந்தபின் தாழியில்
அந்தவுடல் போட்டு புதைப்பராம் -- அந்தயிடம்
மண்டப மும்சமாதி பண்டையில் கட்டுவர்
மண்டபம் மன்னர் வழக்கு
மேற்கில் பிணப்பெட்டி மூடிப் புதைப்பர்பார்
கற்சவப் பெட்டிகன வானுக்காம் -- அற்பருக்கு
கற்சவப் பெட்டிக்கல் லில்அறை செய்துநிறுத்
தற்கல்ல றைகிடையா இங்கு
இந்தியத் துணைக்கண்டத்தில் இறந்தவரை தாழியில் வைத்துப் புதைப்பர்
கல்லில் அறைசெய்து (, கல்லறைப்பெட்டி) வைக்கும் பழக்கம் இந்தியரிடம் கிடையாது
ஒன்று பிணத்தை எரிப்பர் அல்லது புதைப்பர். இந்த இடத்தை இடுகாடு புதை காடு
சுடுவதால் சுடு காடு என்பர். கல்லில் அறைபோல செய்து அதை இடுகாட்டில் வைத்து
அதில் பிணத்தை வைத்து மூடுவது இந்தியாவில் இல்லை. மேற்கு நாடுகளில் அதிலும்
பணக்காரர்களும் வசதி படைத்தோர் மட்டுமே கல்லறை பெட்டிக சாகுமுன்னே தயார்
செய்து வைத்து அதில் அவர் இறந்ததும் கிடத்தி இடுகாட்டில் வைத்து ஈமக்கடன்
செய்வார்கள்
தர்மபுரியில் கல்லைக் குடைந்து கல்லறை பெட்டியை மூடியுடன் செய்து மேலை
நாடுகளுக்கு இன்றும் ஆர்டரின் பேரில் நூற்றுக் கணக்கான பெட்டிகளை அனுப்பி
வருவதை பார்க்கலாம்
இங்கே இறந்தவர்களைபுதைத்தோ எரித்தோ அதன் பின்னர் அவ்விடத்தில்
வசதியானவன் அவ்விடத்தில் சமாதியோ மண்டபம் கட்டுவர். உதாரணம் அண்ணா சமாதி எம் ஜி ஆர் சமாதி காந்தி நேரு சமாதிகள்.இந்தியர்க்கு இந்தியாவில் கல்லறைகளே கிடையாது. குழியில் இடும் இடுகாடு புதைக்கும் புதைகாடுகளே உண்டு
...