கல்லறை சுவாசம்

கத்தி பார்வையில் நெஞ்சை குத்தி கிழித்தாய் !
கைவளையல் ஓசையில் செவியில் தேன் ஊற்றினாய் !
அடியெடுத்து நீ நடக்கையிலே என் தேகத்தை தரையில் சாய்த்தாய் !
அடுத்த நொடி அது வேதனை என்று நான் அறியேனடி?
வாடினால் பூவின் வாசம் மாறாதடி !
நீ கூந்தலில் பூ சூடினால்
பூவின் வாசம் கூடுதடி !
புதைந்த போன முதல் காதலில்
புத்தென்றலே உன் வாசம் வேண்டுமடி !
கல்லறை சுவாசத்தின் என் உடலில் !
கல்லறை சுவாசம் எனக்கு இல்லையடி
உன்னை காணும் வரை !
வற்றாத காதலுக்கு வரைமுறை ஏதும் இல்லையடி !
மௌனத்தின் உள்ள வார்த்தைகள் அனைத்தும் உன்னிடம் சொல்ல மனசு துடிக்குதடி !
ஒளியின் வடிவம் உன் உருவம்
அடைக்கப்பட்ட என் அன்பின் கல்லறையில் எட்டி பார்க்குதடி !
இதயத்தை அது கூறு போட்டு கிழிக்குதடி !
அளக்க முடியாத காதல் கொண்டேனடி !
அது நிரம்பி வழிந்து ஓடும் கண்ணீரை தந்ததடி !
பிரிந்து போகும் காற்றே !
ஒருமுறை இதழோடு இதழ்
சேர்த்து விடு !
உன் இதழ் சேர்த்து என் இறுதி மூச்சை நிறுத்தி விடு !
என்னவளே !
இறுதி யாத்திரை கல்லறை சுவாசத்தில் கூட
இதழ் கவிதை எழுதுவேனடி உன் காதலன்.....

எழுதியவர் : பூமணி. க (6-Feb-21, 3:09 pm)
சேர்த்தது : பூமணி
Tanglish : kallarai suvaasam
பார்வை : 135

மேலே