மனிதனின் குணம்
குறை சொல்லி வாழும்
மனிதனிடம்
குணம் இருக்காது...!!
குணம் காணும்
மனிதனிடம்
குறை சொல்லும்
திறன் இருக்காது...!!
கண் எதிரில் தெரியும்
மனிதனின்
குறைகளை கண்டு
அதை மற்றவர்களிடம்
சொல்லி மகிழ்ச்சி
கொள்ளும் மனிதர்களே...!!
தங்கள் குறைகளை
கண்ணுக்கு தெரியாத
கடவுளிடம் சொல்லி
அழுகிறார்கள்..!!
--கோவை சுபா