சம்யுக்தா-அழுகு தேவதை

வெற்றுக் காகிதமும்
வர்ணிக்கும் கவிதை
வரிகளில் நிரம்பித்தான்
வழிகிறது உன்னழகு

செவ்வானம் சிவக்க
செவந்திடும் பூமியும்
செவ்வந்திப் பூவாக -நீ
செல்லும் பாதையும்

சிவக்கக் கண்டு
சிலிர்த்தேப் போனேன்
செவ்விதழ் விரியும்
செந்தாமரை மலராகப்

புன்னகை விரிந்திட்ட
பூவிதழ் சிந்தும்
இனித்திடும் தேனோ
இழுக்கிறது சுவைத்திட

திரை மறையோ
இலை மறையோ
இன்பத்து அதிகார
இரு வரிகள்

கற்போரைக் கவர்ந்தே
காதலிக்கத் தூண்டுமே
இடையில்லா இடையும்
இழக்கும் புவிஈர்ப்போ

கால் முளைத்திட்ட
கல்லில் வடித்தச்
சிற்பமா இல்லை
சுதை ஓவியமா

வான் தேவதையும்
வியந்தேப் பார்க்கும்
வாணவில்லின் பேரழகே
வர்ணிக்க வார்த்தைகளில்லை..

சமத்துவப் புறா ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவப் புறா ஞான.அ.பாக்ம (10-Feb-21, 6:23 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 68

மேலே