விடுகதைகள் பேசிடலாம்

கலித்தாழிசை பா

அரசாங்கங்கள் மட்டுமே அபார வருவாயில்
அயல்நாட்டு எண்ணெய்களை அதிகமாய் சேகரித்து
அதிகாலை தோறும் புதுவிலையை புகுத்தி வைத்து
அடுத்தடுத்து பொருளாதாரத்தை புதுவெனவாக்கி
ஆனந்தம் மிகக் கொண்டே ஆளுகின்றன இரு அரசுகளே


ஏற்றுக்கும் இறக்குக்கும் எழிலான பல வரிகள்
எல்லா வகை தொழிலுக்கும் ஏகபோக புதுவரிகள்
எந்நிலையிலும் மக்களுக்கு இரக்கம் காட்டுவதில்லை
ஏமாற்றும் நிறுவனத்திற்கு எல்லா வகை தளர்வுகளும்
எதிர்த்து கேட்போர் இல்லத்தில் வரி ஏய்ப்பு சோதனை

நமது பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரம்
நவீன படுத்தவே நாடெங்கும் எல்லாம் தனியார்மயம்
நடுவுநிலை இல்லா அரசூழியர்களால் ஆனது இதுவே
நடுச்சாலையில் வீடுகட்டி சேவைவசூலில் தனியார்கள்
நாள் தோறும் இனிமேல் இது போலே நடைமுறைகள்

வேலை இனி நமக்கு விறகு பொறுக்குதல்தான்
வேறொரு வேலையெனில் ஆடுமாடு கோழி வளர்ப்பு
வேற்றுநாடு சென்றுங்கூட பொருளை ஈட்டி வரலாம்
வெட்டியாய் அமர்ந்துக் கூட விடுகதைகள் பேசிடலாம்
வெற்றி பெறவே உள்நாட்டில் தொழில் செய்வதோ திறமையே
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-Feb-21, 12:51 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 36

மேலே