சுண்டல் பொட்டலத்தில் ஒரு கவிதை

நீங்கள் ஓடிக்கொண்டிருக்கும்
சாலையில்
நான் நடந்து கொண்டிருக்கும்
அவனுடன்
எள்ளி நகையாடும் மொழியில்
ஓட்டங்கள்
மேல் பற்றியெரியும் வாழ்வை
உபதேசிக்கும்
குருவின் அருள்வாக்கொன்றை
பேசியபடி
மனங்களுள் கலந்து சென்றோம்.


=================================

எழுதியவர் : ஸ்பரிசன் (13-Feb-21, 5:04 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 106

மேலே