நானாகிய

நானாகிய

அவள் அருகினில்
அழகொன்று வருவதை
கண்டேன்

அதன் உடைகளில்
கண்ணை கவரும்
வண்ணம் கண்டேன்

அதன் பார்வையை
என் பக்கம் ஈர்க்க
அங்கங்களை
அசைத்து காண்பித்தேன்

சட்டென திரும்பி
என்னை பார்த்தவுடன்

அருகில் இருந்த
பெண்ணையும் இழுத்து
என்னருகில் வந்து
நின்று தலையை
தடவியது

வள்..வள். என்று
வாயை திறந்தும்
வாலையும் ஆட்டி
அன்பை காட்டி
நின்றேன்

வாட்..நான்சென்ஸ்..
தெரு நாயை
எல்லாம் தொட்டுட்டு
டாடிக்கு தெரிஞ்சா..

அந்த பெண்
இந்த குழந்தையை
இழுத்து போனாள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Feb-21, 11:38 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : naanakiya
பார்வை : 250

மேலே