இருப்பது தோன்றிய வழி
அசட்டையாய் இருதயம் இருந்தால் ஆயுள் போய்விடும்
வசதியால் குருதி சுரந்தால் உயிர்கள் தோன்றாது
ஒரு வாழை ஓராண்டில் ஐந்தாறு தாறுகள் ஈன்றால்
விவசாயிக்கு உழைப்புக்குரிய ஊதியம் கிடைக்கும்
பணம் என்ற ஒன்றை மனிதன் ஆக்காமலிருந்தால்
ஏழை என்ற ஒரு இனம் ஆகாமல் இருந்திருக்கும்
போட்டி என்ற கலையினாலே தோல்வி என்பது ஆனது
பொய் என்ற வார்த்தையே ஏமாற்றத்தை ஆக்கியது
புத்தியில் சிதைவை காணவே இங்கு குலப்பிரிவுகள்
புதிய கட்சியைத் தோற்றுவிக்க இதுவே காரணியாம்
உழைக்க முடியாதோர்களால் ஆக்கப்பட்டதே ஆன்மீகம்
குறுகிய புத்தியோரால் ஆனதே உயர்வு தாழ்வு
------ நன்னாடன்.