அதிகாரத்தால்

ஆற்றை அழிப்பவனை வேறோடு அழிக்க வேண்டும்
காட்டை அழிப்பவனின் காலை பூட்டிவிட வேண்டும்
நீரை நஞ்சாக்குவோன் நெடு நரம்பை சிதைக்கணும்
திட்டத்தில் ஊழல் புரிந்தவனை தனித்தீவில் விடணும்
விலையில் விதிமீறுபவனை புலி ஏவி பயமுறுத்தணும்
அதிகாரத்தால் தவறிழப்பவனை பாதாளத்தில் தள்ளணும்
தொடராய் தவறு செய்பவனை தோலுரிக்க வேண்டும்
கொலை செய்பவனுக்கு உணவு கொடுக்காமல் விடணும்
திருடுபவனை மாற்ற தேவையானதை செய்தாக வேணும்
ஏமாற்றுக்காரனை என்றுமே ஒதுக்கிவிட வேண்டும்
வேலையே செய்யாதிருப்பவனுக்கு நீரே கொடுத்தல் கூடாது
கலப்படம் செய்வோருக்கு காலமுழுதும் கருங்கல் சுமக்கச் செய்யணும்
------ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (18-Feb-21, 9:32 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : athigaarathaal
பார்வை : 48

மேலே