காதல்
இனி என்வாழ்வில் நீதானே எல்லாம்
என்றான் நீதான் என்னுயிர் என்றான்
என்பாவி மனம் அவை எல்லாம்
உண்மையே என்று அவனைக் காதலிக்க
ஏனோ எந்தன் கண்கள் இன்று
அந்த காட்சியைக் கண்டது அவன்
இன்னொருத்தியுடன் ...... உறவாட என்காதும்
அதைக் கேட்டது ..... அவன் என்னிடம்
சொன்ன அதே அன்புமொழியை அவளிடம்
கூறுவதை...... என்கண்ணிற்க்கும் காதுக்கும்
அதைத் தந்த கடவுளுக்கும் நன்றி சொல்வேன்
'முழுவதும் பறிபோகும் முன்னே அவனை
அறிந்துகொண்டேன் நான்..