மனம் தொடர்பான
ஏழை என்ற இன வகையை ஒழிக்க முயல்வோம்
யாவருக்கும் ஏற்றக் கலையைக் கற்றுக்கொடுப்போம்
கல்வியை கட்டாயமாக யாவருக்கும் திணித்திடுவோம்
எல்லாவகை உண்மையையும் உரக்கச் சொல்லுவோம்
காசின் அடிப்படையிலான வேறுபாட்டைக் களைவோம்
கடுமையாக எவ்வேலையையும் செய்யப் பழக்குவோம்
காரணமின்றி மிரட்டுவோரை தூசியாய் நினைப்போம்
உணவுப் பொருட்களை உற்பத்தி விலைக்கே விற்போம்
உரிமையில்லா செயலின் மீதான நாட்டம் குறைப்போம்
உரியதைப் பெறவே போராடக்கூடத் துணிவோம்
உண்மையில்லா நீள் பழக்கத்தை தொடர மறுப்போம்
மதம் என்பதையும் மருந்தென நினைத்தே ஏற்போம்
மனம் தொடர்பான எதனையும் மதித்து நடப்போம்
மகத்துவமான எவற்றையும் துதித்து உயர்த்துவோம்
துயர்வுறும் நேர்விலிருந்து வெகுதுரிதமாய் மீளுவோம்
பழமையின் பவித்திரத்தை பாதுகாத்தே வாழ்வோம்
------ நன்னாடன்.