போதைப் பொருளால்
ஆசிரியத்தாழிசை
பயிற்சி எடுத்துப் பழகு
கதிரை எளிதாய் தொடலாம்
பயமிகின் நகமும் பயங்காட்டுமே
எழுபத் திரெண்டு என்ற
மூச்சின் வீச்சையும் பத்தாக்க
உறுமிகு முயற்வே வெற்றித்தருமே
முகமும் வாடினால் அகத்தில்
களைப்போ பயமோ பொருந்தா
உணவோ புகுந்தது எனக்கொள்
தனிமையை மனம்நாடி தேடினால்
மனதினுள் பெருந்துயர் சூழ்துருக்கி
களைப்பாய் சிதைக்கிறது என்றுணர்
போதைப் பொருளால் உடலும்
மகிழ்ந்து எழுச்சிக் கொண்டால்
திடமதி குலைந்தே வீழ்வாய்
தெரியாத தொழிலில் நுழைந்தால்
இழப்பதை தடுக்கவே அறியாது
இருப்பதை சிதறவிட்டு ஓடுவாய்
----- நன்னாடன்.