வஞ்சிப்பா

பணத்தால்பெரும் புகழ்தேடியும்
குணத்தாலுயர் வடைவாரிலை
சனத்தோடுற வெனவாகிற
மனத்தாலவ ருயர்வாரெனில்
அவரை
அள்ளி அணைத்திடும் ஆயிரம் கைகள்
வெள்ளி நிலவின் வெளிச்சம்
துள்ளி விழுந்ததாய்த் துணிந்து வாழ்த்துமே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Feb-21, 1:46 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 46

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே