நகைச்சுவை துணுக்குகள் 34

இரண்டு கிராமப்புற இளைஞர்கள் வேலுவும், கந்தனும் முதல் முறையாக சென்னை வந்தார்கள். சென்னைக்குப்புறப்படுமுன் அந்த ஊர் பெரியவர்கள் சிலர்
“சென்னையிலே ஆட்டோக்காரர்கள் ஏமாற்றி உங்களிடமிருந்து நிறைய பணம் பறித்து விடுவார்கள் எனவே நீங்கள் அவர்களுடன் பேரம் பேசி அவர்கள் கேட்கும் தொகையில் முக்கால் பங்குக்கு மேல் தராதீர்கள்” என்று அறிவுரை தந்தார்கள்.
அதேபோல் வேலுவும், கந்தனும் சென்னை எக்மோர் வந்து அடைந்தவுடன் அவர்களை ஒரு ஒரு ஆட்டோக்கா ர் அணுகினார்.
“ எங்கேங்க போகணும்” என்று கேட்டார்.
அப்பொழுது வேலு “ ராயப்பேட்டை டவர் கிளாக்குக்கு பக்கத்திலுள்ள ஒரு வீட்டிற்குச்செல்ல வேண்டும்” என்றான்”
அப்போது கந்தன்” நானும் அங்கேதான் போகவேண்டும்” என்றான்.
ஆட்டோக்காரர் “நீங்கள் போகும் ராயப்பேட்டைக்கு 100 ரூபாய் ஆகும்” என்றார்.
அந்த இளைஞர்களுக்கு ஊர் பெரியோர் சொன்னது ஞாபகம் வரவே
“அதெல்லாம் முடியாது 75 ரூபாய்தான்” என்றான்வேலு.
ஆமாம், 75 ரூபாய்தான், என்றான் கந்தன்.
ஆட்டோக்காரரும் “சரி” என்றார்.
இருவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தனர். ராயப்பேட்டையில் அவர்கள் போகவேண்டிய இடம் வந்தது. இருவரும் இறங்கினர். வேலு சொன்னபடி 75 ரூபாய் கொடுத்தான். ஆட்டோ புறப்படத்தயாராக இருந்தது.
அப்போது கந்தன் ஆட்டோக்காரனிடம் “இந்தா நானும் 75 ரூபாய்தான் தருவேன். அதற்கு மேல் ஒரு தம்பிடி கூடத்தரமாட்டேன் என்னை ஏமாற்ற முடியாது” என்று 75 ரூபாயை அவர் கையில் திணித்தான்.
**********
*ஒரு ஹோட்டலிலிருந்து ஒரு ஜப்பான்காரரை ஒரு இந்திய டாக்ஸி டிரைவர் தன்டாக்ஸியில் ஏற்றிக்கொண்டார். வண்டி புறப்பட்டு போய்க்கொண்டு இருந்தது.
அப்போது ஒரு ஹோண்டா மோட்டர் சைக்கிள் டாக்ஸியைக் கடந்து சென்றது.
அப்போது அந்த ஜப்பானியர் சொன்னார்
“மோட்டர் சைக்கிள் நல்ல வேகம். எங்க ஜப்பானில் செய்தது”.
சற்று நேரத்தில் ஒரு டயோடா கார் டாக்ஸியை ஓவர் டேக் செய்தது.
“இந்தக்கார், எவ்வளவுவேகம். இதுவும் எங்க ஜப்பான்லே செஞ்சது “ என்றார்.
ஜப்பானியர் இறங்க வேண்டிய இடம் வந்தது. மீட்டர் சார்ஜ் 1500 ரூபாயாகக்காட்டியது 500 ரூபாய்தான் ஆகும் என்று எதிர் பார்த்த ஜப்பான்காரருக்கு ஷாக்.
“என்ன 1500 ரூபாயா? ஏன் இவ்வளவு காஸ்ட்லி ?” என்று கேட்டார்.
அதற்கு அந்த டாக்ஸி டிரைவர்
“ இந்த மீட்டர் ரொம்ப ரொம்ப வேகம். இது எங்க இந்தியாவிலே செஞ்சது” என்றார்.
**************

*ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அவனுடைய வீட்டை சோதனை இட வந்தார். அந்த வீட்டுக்கார்ரோ அவரை உள்ளே விட முடியாது என்றார். உடனே இன்ஸ்பெக்டர் “இதோ நான் இந்த வீட்டை சோதனை செய்யும் அரசாங்க அதிகாரத்துடன் தான் வந்திருக்கிறேன். அதனால் நீங்கள் என்னைத்தடுக்க முடியாது” என்று தன் பாட்ஜையும், அரசாங்க ஆணையையும் அவனுக்குக்காண்பித்தார்.
“அப்படியா? ஆனால் பின்னால் இருக்கும் ரூம் பக்கம் மாத்திரம் போகவேண்டாம்” என்றார்
“நீங்கள் என்னை அவ்வாறு கட்்டுப்படுத்த முடியாது” என்று கூறி அங்கே சென்றார் அப்போது அங்கிருந்த ஒரு வேட்டை நாய் அவர்மீது பாய வந்தது. அதிகாரி திடுக்கிட்டுக்கத்த, அப்போது அந்த வீட்டுக்காரர் சொன்னார் “ இப்ப உஙக பாட்ஜையும் அரசாங்க சம்மனையும் அது கிட்டே காட்ட வேண்டியதுதானே” என்றார்
***************
*அந்த நோயாளியின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.
டாக்டர் “ நீங்கள் இன்னும் ஒரு வாரம்தான் உயிரோடு இருப்பீர்கள்”
“ இன்னும் அதிக நாட்கள் வாழ விரும்புகிறேன், டாக்டர். அதற்கு வழி இல்லையா? நான் அந்த டிவி ஷோ சீரியல் ஒன்று முடியும் வரையிலாவது வாழ ஆசைப்படுகிறேன்
நீங்கள் எண்ணைப்பதார்த்தங்களை விரும்பி சாப்பிடுவீர்களா?
ஆம்
அதை உடனடியாக நிறுத்துங்கள்
அதிக நாள் வாழ்வேனென்றால் கட்டாயம் நிறுத்திவிடுவேன்
ராத்திரி ரொம்ப நேரம் கண்விழித்திருப்பீர்களா?
ஆம்
அதை உடனடியாக நிறுத்துங்கள்
தாம்பத்திய உறவை குறைத்துக் கொள்ளுங்கள்
சரி டாக்டர்
குடிப்பீர்களா?
ஆம்
அதை உடனடியாக நிறுத்துங்கள்
புகை பிடிப்பீர்களா?
ஆம்
அதையும் உடனடியாக நிறுத்துங்கள்
சரி டாக்டர் நான் இவ்வளவையும் செய்தால் இன்னும் எத்தனை காலம் அதிகமாக வாழ்வேன்?.
ஒரு வாரம்தான் வாழ்வீர்கள் . ஆனால் அந்த ஒரு வாரமே உங்களுக்குப்பல வருடங்கள் வாழ்ந்தது போன்ற எண்ணத்தைத்தோற்றுவிக்கும். அதற்குப பிறகு இன்னும் பல நாள் வாழணுங்கிற எண்ணமே உங்களுக்கு வராது.
——————-

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (25-Feb-21, 1:58 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 70

மேலே