குளு குளு குளிர் கடையில்

விற்பிப்பவன் சிறப்பாய் உழைப்பவன் ஏழையாய்
அரிசிக்கடை வைத்தவன் ஆண்டுக்கொரு புதுக்கடை
நெல்லின் உற்பத்தியாளன் அரசின் தள்ளுபடிக்காக
பொன் நகை செய்வோன் வாழ்வு புரையோடிய மரமாய்
அதை விற்போன் வெண்பட்டில் வேலையாட்கள் நூறு
குடிக்க நீரின்றி நீலக்கடலில் மீன்பிடிப்போன்
குளு குளு குளிர் கடையில் குதுகலத்தில் விற்போன்
துணி நெய்வோர் யாவரும் கிழிந்த துகில் உடுத்தி
அதை விற்போன் எழிலாய் அரசனொத்த ஆடையில்
ஆடுமாடு மேய்ப்போர் வாழ்க்கை அவைகள் போன்றே
அதை இரைச்சிக்கு விற்போர் வீடு அரண்மனையென
சிறுகடை வைத்தாலும் சிறப்பான நிலையில் அவர்கள்
பெரும் உழைப்புச் செய்தாலும் அவனோ கடைநிலை
இதுதான் கோளப்பு வியின் ஆதி தொடக்க முதலே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Mar-21, 9:29 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 47

மேலே