வழவழப்புக்கு

அரசர்கள் போலேவே அரசியல் கட்சிகள் ஆக காரணம்
அரசியல் சாசனத்தின் ஆற்றல் மிகு சட்டங்களே
குற்றங்களைத் தூண்டுவது குதுகலிக்கும் மனித மனம்
குற்றத்தை ஒழுங்குப்படுத்துவது அரசியல் சாசனமே
பாதிக்கப்பட்டோர் நாடுவது பக்க பலமாய் சட்டத்தை
சட்டம் ஆளுவோரோ பாதிப்பு கொடுத்தோருக்கு பாலமாய்
வழவழப்புக்கு வாழையென்போம் வளையாததற்கு இரும்பென்போம்
இவ்விரு நிலைக் கொண்டதற்கு கம்பீர சட்டமென்போம்
பயந்தவனிடம் சட்டங்கள் அதிகமாய் பயமுறுத்தும்
துணிந்தவர்களிடம் அவைகளே குனிந்து அடிபணியும்
குருடனும் செவிடனும் கூத்து பார்ப்பதைப்போல் உள்ளது சட்டங்கள்
கூரிய வாள் குத்துவதைப் போன்றே இருக்க வேண்டும் இனி சட்டங்கள்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Mar-21, 9:53 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 66

மேலே